எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி: விஜயகாந்த்
First Published : 26 Mar 2011 03:22:57 AM IST
Last Updated :
பல்லாவரம் அ.தி.மு.க. வேட்பாளர் ப.தன்சிங்கை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
சென்னை, மார்ச் 25: எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி அமைத்துள்ளேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தாம்பரம், பல்லாவரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் டி.கே.எம். சின்னையா, பி.தன்சிங், ஆலந்தூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
மக்களோடுதான் கூட்டணி என்று சொன்ன விஜயகாந்த் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இருக்கிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்த எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி அமைத்துள்ளேன்.
அதற்காக நான் மற்றவர்களைப் போல ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கப்போவது இல்லை. பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த கருணாநிதி, இந்த முறை என்னை எப்படியாவது தனித்து நிற்க வைத்து மறுபடியும் தமிழகத்தை சுரண்ட திட்டமிட்டார். அவரது திட்டத்தை பொடிப்பொடியாக்க நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளேன்.
கருணாநிதியின் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று கூறி, அவருடைய மக்களுக்கு சொத்துகளை குவித்து வருகிறார். இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார், மறந்தும் கூட தி.மு.க.வுக்கு யாரும் ஓட்டு போட்டுவிடாதீர்கள்.
தி.மு.க.வுக்கு ஜால்ரா அடித்தும், மிரட்டியும் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடக்கும்போது அங்குள்ள மேல் மாடியில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. தமிழகத்தை சூழ்ந்துள்ள இருளை விலக்கும் நாள் ஏப்ரல் 13.
திருவாரூர் கூட்டத்தில் பேசியவர்கள் இது கொள்கைக் கூட்டணி என்று பேசினர். ஆனால் அது கொள்கைக் கூட்டணி அல்ல. தி.மு.க ஆட்சிக்கு ஜீரோ மார்க் போட்ட ராமதாஸ், இப்போது கருணாநிதியை ஹீரோ என்கிறார்.
தமிழக மக்களின் நலனுக்காக கருணாநிதி என்றுமே தில்லி சென்றது இல்லை. தமது குடும்பத்துக்கு பதவி வாங்க வேண்டும் என்றால் தில்லி செல்கிறார். கச்சத்தீவை தாரை வார்த்தவர் இப்போது அதை மீட்க புது ஒப்பந்தம் போடுவோம் என்கிறார். அப்படி என்றால் பழைய ஒப்பந்தம் என்ன ஆயிற்று?
நானும்தான் டி.வி. நடத்துகிறேன். ஆனால் ஒரு புதுப் படம் கூட வாங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் 200 படத்துக்கும் மேல் தங்கள் கைவசம் வைத்துள்ளனர்.
மதுரையில் பிறந்த நான், ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறேன். அழகிரி மதுரைக்கு வெளியே வந்து போட்டியிடத் தயாரா?
கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வரை ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள். எல்லா விலைவாசிகளும் உயரத்தான் செய்யும் என்றார் விஜயகாந்த்
Assembly polls 2011 Tamilnadu - Poll Prediction
Friday, March 25, 2011
Captain speech
எகிப்து, லிபியாவை போல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்: விஜயகாந்த் ஆவேசம்
செஞ்சி: ""எகிப்தில் முபாரக்கிற்கு எதிராகவும்; லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியை போல், தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும்,'' என, விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவலிங்கத்தை ஆதரித்து அவர் பேசியதாவது: நான் கூட்டணி சேர்ந்தேன்; ஆனால் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும். நான் பேசினால் கோர்ட்டில் வழக்கு போடுவோம் என பயமுறுத்துகின்றனர். கோர்ட்டுக்கு அலைவது நான் கிடையாது. தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் ராஜா ஜெயிலில் கிடக்கிறார். தி.மு.க.,வின் கொள்கை ஜெயிலில் கிடக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால், செல்போன் ஊழல். நீரா ராடியாவை சி.பி.ஐ., விசாரிக்க, டில்லியில் உள்ள பண்ணை வீட்டுக்கு போகிறது. ராஜாவின் மனைவியை விசாரிக்க பெரம்பலூர் போகின்றனர். ஆனால், முதல்வர் வீட்டிற்கு சி.பி.ஐ., குழு வந்தால் அசிங்கமாகி விடுமாம். அதனால் அங்கே விசாரிக்காமல் அறிவாலயத்தின் மாடியில், கலைஞர் "டிவி' அலுவலகத்தில் விசாரிக்கின்றனர். கீழே ஐவர் குழு தொகுதி பிரிக்கிறது, மேலே குடும்பத்தை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இது என்ன கட்ட பஞ்சாயத்து.
எம்.ஜி.ஆர்., சொல்வதுண்டு, கருணாநிதி போடும் திட்டங்கள் எல்லாம் நன்றாக இருக்கும்; கடைசியில் அது அவரது குடும்பத்திற்கு போய் சேரும் என்பார். உணவு அமைச்சர் ஏமாற்றுக்கார வேலு சொல்லுகிறார்... எம்.ஜி.ஆர்., சத்தில்லாமல் சத்துணவு போட்டவராம். மக்களை மடையர்களாக நினைத்தால் மக்கள் உங்களை மடையர்களாக ஆக்கிவிடுவர். அது தான் தேர்தலில் வைக்கும் கருப்பு மை. உங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி இல்லை, கொள்ளையடிக்கும் கூட்டணி உங்களுடையது. நீங்கள் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் நான் ஏன் கட்சி ஆரம்பித்திருக்கப் போகிறேன். இலங்கை தமிழர்களை அழித்து, சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாமல் கச்ச தீவை தாரை வார்த்தவர்கள் காங்கிரசார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வருமானவரித்துறை ரெய்டு வரக்கூடாது என்பதற்காக கச்ச தீவை தாரை வார்த்தார்.
நான் தொப்புளில் பம்பரம் விட்டேன் என்கின்றனர். யார் தொப்புளில் விட்டேன்; கதாநாயகி தொப்புளில் தானே விட்டேன்; டைரக்டர் சொன்னார் செய்தேன். எதற்காக நான் பயப்பட வேண்டும். தேர்தல் வந்து விட்டது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பர். திருவண்ணாமலையில் தெய்வம் உள்ளது; அது நின்று கொல்லும். ஓட்டு போட்ட உங்கள் தேவைகளை நிறைவேற்ற தவறினால், நானாக இருந்தாலும் சட்டையை பிடியுங்கள். நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களது சட்டையை பிடியுங்கள்.
எகிப்தில் முபாரக்கிற்கு எதிராகவும், லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியை போல், தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும். தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போகும். தே.மு.தி.க., வேட்பாளர் செஞ்சி சிவாவுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள். பக்கத்து தொகுதியில் நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்

Thursday, October 21, 2010
TamilNadu 2011 Assembly Polls Prediction
Its quite predictable that the people of Tamilnadu are in want of a leader in the ways of Kamaraj, Anna, MGR. The ruling DMK Govt has captured half of Tamilnadu for its own family treasury. All fields like Cinema, Real estate, Mining,Educational Institutions and most of the Industries are led by ruling party functionaries. Its high time for the people to put a full stop to the rising evils. If the situation continues, then there won't be a difference between Democracy and the King's rule. The rising issues of law and order problem, corruption in thousands of crores have made people think about the future of Tamilnadu.
The people of Tamilnadu are longing for a leader. My opinion is that Captain Vijayakanth has more scope to play in the forthcoming elections, unless and until people don't sell themselves for votes. If there arises a coalition Govt grouped by DMDK, Congress , TamilNadu can be saved. f people really want to save the state, there has to be a non-DMK, non-AIADMK government.These people have looted the state and brought debt of ten's of thousands per state citizens. People need to realize not to go behind free goods. Nothing is free in life. Hardwork is the only way for a steady income for the individual.
The various factors like Electricity shortage, narrowing the river beds and sand smuggling, monopoly in cine industry, wasting Govt money for unwanted functions like Tamil Conference, illicit conquering of lands, industries, forbidding the media to tell the truth, aquisition of denumerable wealth by the Mk family, complete out of control Law system will definitely let down the ruling Government. There is high anti-incumbency wave that will go in favour of Vijayakanth. Let's wait and watch :)

Subscribe to:
Posts (Atom)